ராஜ தந்திரம் படம் மூலம் நடிகராகவும், சசிகுமாரின் கிடாரி படம் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் தர்புகா சிவா. இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட தர்புகா சிவா, இயக்குநர் அவதாரம் எடுத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
நிமிர், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களில் இவர் இசையமைத்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இதனிடையே இயக்குநராக இவர் அறிமுகமாகும் புதிய படம் #MNMN என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்தப்படத்தின் படப்படிப்பு பணிகள் கடந்த மே மாதம் தொங்கிய நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், இப்படத்தின் டைட்டில் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப்படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரிக்கிறார். துருவங்கள் பதினாறு புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.
தளபதி 64 படப்பிடிப்பில் சிக்கல்: ஆக்ஷன் சொல்ல முடியாமல் டெல்லியில் தவிக்கும் இயக்குநர்