ETV Bharat / sitara

'தர்பார்' ரஜினிக்காக ஒன்றிணைந்த பிரபலங்கள் இவங்கதான்!

author img

By

Published : Nov 6, 2019, 6:02 PM IST

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 'தர்பார்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடும் பிரபலங்களின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

darbar

ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘தர்பார்’. லைகா நிறுவன தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நிறைவுபெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் எல்லாம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நவம்பர் 7ஆம் தேதி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ரஜினியின் தீம் மியூசிக் வெளியாகும் என அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்படம் 2020 பொங்கலுக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. தற்போது வெளியிடும் பிரபலங்களின் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் நாளை (நவ.7) மாலை 5.30 மணிக்கு வெளியிடுகின்றனர்.

தமிழ் - தெலுங்கு போஸ்டரை உலகநாயகன் கமல் வெளியிடுகிறார். மலையாளத்தில் நடிகர் மோகன் லால் வெளியிடுகிறார். இந்தியில் நடிகர் சல்மான் கான் வெளியிடுகிறார். இதன் மூலம் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ரஜினிக்காக ஒன்றிணைகின்றனர்.

இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

இதையும் வாசிங்க: 'தர்பார்’ முடிஞ்சதும் கட்சி பேர் சொல்றாராம் தலைவரு!

Intro:Body:

Darbar Motion Poster 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.