ETV Bharat / sitara

குடும்பத்தினருடன் லூட்டி அடிக்கும் டேவிட் வார்னர் - டேவிட் வார்னரின் டிக்டாக் வீடியோ

'போக்கிரி' டிக்டாக் வீடியோவைத் தொடர்ந்து, டேவிட் வார்னர் 'ராமுலோ ராமுலா' (Ramuloo Ramulaa)' பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

Warner
Warner
author img

By

Published : May 12, 2020, 6:24 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விதமான விளையாட்டுத் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள், தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், தற்போது சமூக வலைதளப்பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். சில தினங்களுக்கு முன், தனது மனைவியுடன் 'அலா வைகுந்தபுரமுலு' படத்தில் இடம் பெற்ற 'புட்ட பொம்மா புட்ட பொம்மா' (Butta bomma) பாடலுக்கு டிக் டாக்கில் நடனமாடி பதிவிட்டிருந்தார்.

டேவிட் வார்னரின் நடனத்தை விட, அவருக்குப் பின்னால் அவரது குழந்தை செய்த சுட்டித்தனம் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது.

இதற்கு முன் தனது மகள் ஐவி மேவுடன் இணைந்து டேவிட் வார்னர், பாலிவுட் பாடலான 'ஷீலா கி ஜவானி' பாடலுக்கு நடனமாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான, 'போக்கிரி' படத்தின் வசனத்தை டிக்டாக் செய்து தெலுங்கு ரசிகர்களையும் பிரபலங்களையும், தன் பக்கம் திரும்பச் செய்தார்.

இவரின் டிக்டாக் வீடியோவைப் பார்த்து பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத், 'என் படத்தில் நீங்கள் ஒரு காட்சியில் வரவேண்டும் என்று விரும்புகிறேன்' என கருத்து தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தற்போது டேவிட் வார்னர், தனது மனைவி குழந்தையுடன் 'அலா வைகுந்தபுரமுலு' படத்தில் இடம் பெற்ற 'ராமுலோ ராமுலா (Ramuloo Ramulaa)' பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோவை டேவிட் வார்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகி, அதன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். இவரின் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் லைக் செய்தும்; லாக்டவுன் முடிந்த பின் 'டேவிட் வார்னர் வீரர் என்பதை மறந்து நடனத்துக்கு அதிகம் கவனம் தருவார்' என கருத்தும் பகிர்ந்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.