ETV Bharat / sitara

கண்ணான கண்ணே ... டி.இமானுக்கு பிறந்த நாள் - ரசிகர்கள் வாழ்த்து! - D IMMan birthday special

இசையமைப்பாளர் டி.இமான் தனது 39ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில். சமூக வலைத்தளங்களில் திரைபிரபலங்கள், அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

d-imman-birthday
d-imman-birthday
author img

By

Published : Jan 24, 2022, 1:32 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். 2001ஆம் ஆண்டு ’தமிழன்’ திரைப்படத்தில் முலம் தனது இசை பயணத்தை தொடங்கினார். மிகக் குறைந்தக் காலத்திலேயே அதிக திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கும்கி படத்தில் இவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்.இதற்காக இவருக்கு சிறந்த இசையமைபாளருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

டி.இமான் கிளிக்
முதல் படத்தில் டி.இமான் கிளிக்

அதன் பிறகு இமான் தொட்ட படங்கள் எல்லாம் ஹிட். மண் மணம் மாறாமல் அவர் கொடுக்கும் ஒவ்வொரு பாடல்களும் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. ‘மைனா’, ‘வெள்ளக்கார துரை’ என பல ஹிட் பாடல்களை வழங்கி முன்னணி இசையமைப்பாளராக இடம்பிடித்தார்.

தேசிய விருது

இந்நிலையில் அவர் ’டிக்டிக்டிக்’ படத்தோடு தனது 100 படத்தை நிறைவு செய்தார். பின்னணி இசை மட்டுமின்றி பல படங்களில் சூப்பர் ஹிட்டான பாடல்களையும் பாடி உள்ளார். பிரபலமான டிவி சீரியல் டைட்டில் சாங்கிற்கும் இவர் இசையமைத்துள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாங்கிய 5ஆவது தமிழ் இசையமைப்பாளர் இமான் தான்.தற்போது வரை 100க்கும் அதிகமான படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

தற்போதும் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தனது இசையில் மட்டுமின்றி யுவன்சங்கர் ராஜா போன்ற பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியுள்ளார். கடைசியாக இவர் இசையமைத்துள்ள அண்ணாத்த படம், ரஜினிக்காக இவர் இசையமைத்த முதல் படமாகும்.

டி.இமான்
டி.இமான்

சிவகார்த்திகேயன் நடித்த 5 படங்களுக்கு இசை

சிவகார்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்பாடாத வாலிபர் சங்கம் படத்தில் ”ஊதா கலரு ரிப்பன்”, ”பார்க்காத பார்க்காத” போன்ற அப்படத்தின் அனைத்து பாடல்களும் மண் மணம் மாறமல் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கும். அதிகபட்சமாக சிவகார்த்திகேயன் நடித்த 5 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

இசை உலகை அசத்தி வரும் டி.இமான்
இசை உலகை அசத்தி வரும் டி.இமான்

அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கண்ணான கண்ணே பாடல் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலம்.இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். தற்போது வரை பலரும் தங்களுடைய மொபைலில் ரிங்டோனாக வைத்திருக்கிறார்கள் இப்பாடலை. தந்தை-மகள் உறவுக்குப் பாலமாகவும், அந்த உறவுவை பலப்படுத்தவும் செய்திருக்கிறது இப்பாடல். இப்படத்தில் அடிச்சி தூக்கு பாடலும் ரசிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இசையமைப்பாளர் டி.இமான்
இசையமைப்பாளர் டி.இமான்

இப்படி பல ஹிட் பாடலை தொடர்ந்து கொடுத்து வரும் டி.இமான் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி சினிமாக்களில் தனது அற்புதமான இசையால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார். இவர் தனது 39ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் திரைபிரபலங்கள், அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : 'எதற்கும் துணிந்தவன்' வால் பேப்பர் புகைப்படங்கள் ரிலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.