'பீட்சா', 'சூதுகவ்வும்', 'அட்டகத்தி', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட வித்தியாசமான மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் 'மாயவன்', 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இவர் தற்போது '4ஜி', 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இவர் மீண்டும் படம் இயக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதன்படி, தான் இயக்கவுள்ள படத்திற்கு 'கொற்றவை' என தலைப்பிட்டுள்ளார் சி.வி.குமார். இதில் ராஜேஷ் கனகசபை, வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவாளராகவும் அஸ்வின் எடிட்டராகவும் பணிபுரியவுள்ளனர்.
இந்த படத்தின் பிடிப்பு இன்று (டிசம்பர் 14) பூஜையுடன் தொடங்கியது. காரைக்குடி, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.