உலகம் முழுவதும் கரோனா தொற்றுப் பாதிப்பு அதிகளவில் உள்ளது. கரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் மருத்துவத் துறையினர் அயராது உழைத்து வருகின்றனர்.
பிபிஇ உடை அணிந்தபடி பணி செய்யும் மருத்துவர்களால் தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், கரோனா பணியில் அயராது உழைக்கும் மருத்துவத் துறையின் களப்பணியாளர்களுக்காக 7 லட்சம் தண்ணீர் பாட்டில்களை நன்கொடையாக நடிகர் டூவைன் ஜான்சன் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஜான்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " இந்த செய்தி வெளியில் உள்ள சிறப்பான மனிதர்களுக்காக தான். நான் கூறியது கரோனா போராட்டத்தில் அயராது உழைத்து வரும் களப்பணியாளர்களை தான்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
நீங்கள் தொடர்ச்சியாக நற்பணிகள் செய்திட வேண்டும். எனக்குச் சொந்தமான நிறுவனத்தில் தயாரிக்கப்படும் 7 லட்சம் தண்ணீர் பாட்டில்களை நன்கொடையாக வழங்கியுள்ளேன். இந்த முயற்சியானது கரோனா களப்பணியாளர்களுக்கு நன்றி சொல்லும் சிறிய வழி தான். எங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் பாதுகாக்கும் உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், டூவைன் ஜான்சன் தான் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரதாரர் பதிவுக்கு அதிக பணம் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகின.