ETV Bharat / sitara

அஜித் பட நடிகைக்கு சிறை தண்டனை! இதுதான் காரணம்?

மும்பை: செக் பவுன்ஸ் வழக்கில் நடிகை கொய்னா மித்ராவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து அந்தேரி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Koena Mitra
author img

By

Published : Jul 23, 2019, 10:50 AM IST

நடிகை கொய்னா மித்ரா தமிழில் தூள், அயன், அசல் உள்ளிட்ட படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். கொய்னா மித்ரா மாடல் அழகி பூனம் சேத்தியிடம் 2013ஆம் ஆண்டு 22 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடனை திருப்பி செலுத்தும் விதமாக முதல் தவணையில் கொய்னா மூன்று லட்சத்துக்கான காசோலையை பூனம் சேத்தியிடம் வழங்கியுள்ளார். அந்தக் காசோலையை அவர் வங்கியில் செலுத்தியபோது அந்தக் கணக்கில் போதிய பண இருப்பு இல்லாத காரணத்தால் பவுன்ஸ் செய்யப்பட்டது.

இது பற்றி பூனம் சேத், கொய்னா மித்ராவுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கையாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு அவர் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் இல்லாததால் அந்தேரி பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையின்போது நீதிபதி, பூனம் சேத்திக்கு உரிய பணத்தை கொய்னா மித்ரா திருப்பி வழங்கவும், காசோலை மோசடி வழக்குக்காக ஆறு மாத சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

இது குறித்து கொய்னா மித்ரா கூறுகையில், இறுதி வாதத்தின்போது எனது தரப்பு நியாயத்தை கேட்கவில்லை. இந்தப் பொய் புகார் எனக்கு எதிராக ஜோடிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு குறித்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளேன் எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.