சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த நோய் காரணமாக இதுவரை நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக இதுவரை 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தாக்குதல் அதிவேகமாகப் பரவிவரும் நிலையில், அந்நாட்டில் தேசிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகமாக வாஷிங்டன், கலிபோர்னியாவில் உள்ளது.
கொரோனாவிலிருந்து தப்பித்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பென்சில்வேனியா, நியூ ஜெர்ஸி ஆகிய மாகாணங்களில் செயல்பட்டுவரும் 10 ஏஎம்சி திரையரங்குகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏஎம்சி நிறுவனம் கூறுகையில், இன்று (மார்ச் 15) இரவு கடைசி காட்சியுடன் திரையரங்கம் மூடப்படும். இந்த நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிலையை உள்ளூர் நிர்வாக அலுவலர்கள் அறிவிக்கும்வரை திரையரங்கம் மூடப்பட்டிருக்கும்.
பார்வையாளர்கள் திரையரங்கில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தால் திரையரங்கம் திறக்கும்போது புதிய படத்தின் காட்சிகளைப் பார்வையாளர்கள் காணலம் என்று கூறியுள்ளது.