தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்துவருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் வீடுகளில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக ’தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் மாநகராட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட இருந்தது.