ETV Bharat / sitara

தள்ளிப்போன வலிமை: 'மனசு ரொம்ப வலிக்குது' - ரசிகர்கள் வேதனை - Corana spread postponed valimai release Ajith fans are sad

வலிமை திரைப்படம் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மனசு ரொம்ப வலிக்குது என அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

கரோனவால் தள்ளிப் போன வலிமை- கண்ணீர் வடிக்கும் அஜித் ரசிகர்கள்

author img

By

Published : Jan 10, 2022, 6:05 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் ஒமைக்ரான், கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அஜித் நடிப்பில் வெளிவர இருந்த வலிமை திரைப்பட ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்தது. இதனால் கோவை மாவட்ட அஜித் ரசிகர்கள், 'மனசு ரொம்ப வலிக்குது' என்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

சில ஆண்டுகளாக 'வலிமை அப்டேட்' என்ற சொல்லை ட்ரெண்ட் செய்துவந்த நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்தத் திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், வலிமை ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதால் அஜித் ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே அடங்காத அஜித் குரூப்ஸ் என்ற அஜித் ரசிகர்கள், 'ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it's ok' என்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இபோஸ்டர்கள் கோவை வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறிவருகிறது.

இதையும் படிங்க: வலிமை பட இயக்குநருக்கும் யுவனுக்கும் இடையே விரிசல்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.