இயக்குநர் ஹரி தற்போது அருண் விஜயை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், ராதிகா, பிரகாஷ்ராஜ், ஜெயபாலன், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ் இப்படத்தில் நடிக்கிறார். புகழ் ஏற்கனவே சந்தானம் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். தற்போது ஹரி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.