தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் அஸ்வின். இவர் தற்போது திரைத்துறையில் அடியெடுத்து வைக்கிறார்.
அஸ்வின் நடிக்கும் புதிய படத்திற்கு 'என்ன சொல்லப் போகிறாய்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ’டிரிடென்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை விளம்பரப் படங்களை இயக்கிய ஹரிஹரன் என்பவர் இயக்குகிறார். ரிச்சர்ட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர்.
'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் புகழ் நடிக்கிறார். நகரப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை.19) தொடங்கியது.
படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு 'என்ன சொல்லப் போகிறாய்' படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.
இதையும் படிங்க: என்னது எனக்கும் சிவாங்கிக்கும் திருமணம் ஆயிடுச்சா? - அஸ்வின் விளக்கம்