குவாண்டின் டொரண்டினோ இயக்கிய 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' என்னும் திரைப்படத்தில் பிராட் பிட் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். தற்போது இவர், 'டெட்பூல் 2', 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் பிரசண்ட்ஸ்: ஹோப்ஸ் & ஷா' போன்ற பிளாக்பஸ்டர் ஆக்சன் படங்களை இயக்கிய டேவிட் லீட்ச் இயக்கும் 'புல்லட் ட்ரெயின்' என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம், இசக்கா கொட்டாரோ எழுதிய ஜப்பானிய நாவலான மரிய பீட்டிலை ( Maria Beetle) தழுவி எடுக்கப்படுகிறது. இந்த நாவலானது, ஒரு பணியின் காரணமாக ஐந்து பேர் டோக்கியோவிலிருந்து மோரியோகாவுக்கு புல்லட் ரயிலில் பயணிக்கின்றனர். இந்தப் பயணத்தில் அவர்களுக்கு தாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பதைத் தெரிந்துகொள்கின்றனர். பின்னர் மோரியோகாவில் அவர்களுக்காக என்ன காத்திருக்கிறது என்பதே கதை.
எழுத்தாளர் ஜாக் ஓல்கெவிச் இப்படத்திற்குத் திரைக்கதை எழுதியுள்ளார். சோனி பிக்சர்ஸ், 87North ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்புகள் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்சன் பட இயக்குநருடன் கைகோத்த ஆஸ்கர் நாயகன்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் நாயகன் பிராட் பிட் இசக்கா கொட்டாரோ எழுதிய ஜப்பானிய நாவலான மரிய பீட்டிலை தழுவி எடுக்கப்படும் 'புல்லட் ட்ரெயின்' படத்தில் நடிக்கவுள்ளார்.