ETV Bharat / sitara

பள்ளி மாணவன் 'கோமாளி' ஜெயம் ரவி உண்மை அன்புக்கு அடிமை - ஜெயம் ரவி

பள்ளி மாணவன் தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தும்போது ஏற்படும் விபத்தில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படுத்துகிறது ஜெயம் ரவியின் கோமாளி.

comali
author img

By

Published : Aug 18, 2019, 2:01 PM IST

பள்ளி மாணவன் நடிகர் ஜெயம் ரவி தனது காதலி சம்யுக்தா ஹெக்டேவிடம் காதலை வெளிப்படுத்த ஒரு இடத்தில் காத்திருக்கிறார். அப்போது லோக்கல் ரவுடிகளால் வரும் பிரச்னையில் சிக்கும் காதல் ஜோடி அங்கிருந்து தப்பிச் செல்லும்போது லாரி மோதி விபத்துக்குள்ளாகிறார் ஜெயம் ரவி.

விபத்து காரணமாக 16 ஆண்டுகள் கோமாவில் இருக்கும் ஜெயம் ரவியை யோகி பாபுவின் குடும்பம் வீட்டை அடமானம் வைத்து ஜெயம் ரவிக்கு சிகிச்சை அளித்துவருகிறது. திடீரென ஒருநாள் ஜெயம் ரவிக்கு நினைவு திரும்புகிறது.

comali
காதலி சம்யுக்தா ஹெக்டேவுடன் ஜெயம் ரவி

நினைவு திரும்பினாலும் பள்ளி மாணவனாகவே அவரின் மனநிலை இருக்கிறது. இதனால் நவீன உலக மாற்றத்தில் வாழ முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில் சிகிச்சைக்காக அடமான வைத்த வீடு ஏலத்திற்கு வருகிறது. அந்த வீட்டை காப்பாற்ற ஜெயம் ரவி என்னவெல்லாம் செய்கிறார் என்பது மீதி கதை.

வித்தியசமான கதை, புதிய முயற்சி என்றால் அதில் ஒரு கை பார்ப்பவர் ஜெயம் ரவி. அதை இப்படத்தில் சிறப்பாக செய்துள்ளார். காஜல் அவ்வப்போது வந்து செல்கிறார். சம்யுக்தா ஹெக்டே பள்ளி மாணவியாக மிக அழகாக நேர்த்தியாக தன் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். கே.எஸ். ரவிக்குமார் அரசியல்வாதியாக மனதில் நிறைகிறார்.

comali
காஜல் அகர்வால் - ஜெயம் ரவி

ஸ்மார்ட்போன் தொடங்கி, சென்னை வெள்ளம், கூவத்தூர் பஞ்சாயத்து வரை உண்மைச் சம்பவங்களுடன் இணைத்து மனிதம் பேசியது அருமை. ஆனால் திரைக்கதை எங்கேயோ சென்று, சுற்றி வருகிறது. மொபைலுக்கு அடிமையாகாதே உண்மையான அன்புக்கு சல்யூட் அடி எனச் சொல்லவருகிறது.

comali
பள்ளி மாணவன் ஜெயம் ரவி

பாடல்கள் ஹிப்ஹாப் ஆதி குறிப்பிடும்படியாக இல்லை. பின்னணி ஓகே. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில் சென்னை வெள்ளம், ஃபிளாஷ் பேக் காட்சிகள் அருமை.

லாஜிக்குகளை மறந்த 'கோமாளி' நல்ல எண்டர்டெய்ன்மென்ட்!

Intro:
கோமாளி விமர்சனம்Body:படம்- - கோமாளி.

தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷனல்.

இயக்கம். - பிரதீப் ரங்கநாதன்.

இசை - ஹிப்ஹாப்‘ தமிழா ஆதி.

நடிகர்கள்: ‘ஜெயம்‘ ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே

கதை

90 களில் ஆரம்பமாகிறது படம் பள்ளி மாணவனாக ஜெயம் ரவி தன்னுடன் படிக்கும் நிகிதாவிடம் (சம்யுக்தா ஹெக்டே) காதலைச் சொல்ல தங்கள் வீட்டில் உள்ள ஒரு சிற்பத்தை பரிசாகக் கொடுத்து தன் காதலை வெளிப்படுத்த குறிப்பிட்ட இடத்தில் காத்து இருக்கிறார் ஜெயம் ரவி

அதே இடத்தில் லோக்கல் ரவுடிகளால் வரும் பிரச்சனையில் சிக்கும் காதல் ஜோடிகள் அங்கிருந்து தப்பிச் செல்லும்போது லாரி மோதி விபத்துக்குள்ளாகிறார் ஜெயம் ரவி. விபத்து காரணமாக 16 வருடங்கள் கோமாவில் இருக்கும் ஜெயம்ரவியை யோகி பாபுவின் குடும்பம் வீட்டை அடமானம் வைத்து அவருக்கு ஜெயம்ரவிக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஜெயம் ரவிக்கு நினைவு திரும்புகிறது நினைவு திரும்பினாலும் அவர் பள்ளி மாணவராகவே அவர் மன நிலை உள்ளதால் நவீன உலகுடன் சேர்ந்து வாழ முடியாமல் அதீத பிரச்னைகளுக்கு ஆளாகிறார் ஜெயம் ரவி. இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழுகிறது . அதே சமயத்தில் சிகிச்சைக்காக அடமானம் வைக்கப்பட்ட வீடு ஏலத்திற்கு வரும் சூழ்நிலை. தனது நண்பனின் வீட்டை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஒரு அருங்காட்சியகத்தில் செக்யூரிட்டியாக வேலையில் சேருகிறார் ஜெயம்ரவி. அங்கு தங்கள் ஒரு ராஜ குடும்பம் என்றும் தங்களுக்கு சொந்தமான ஒரு சிலை தற்போது கோடிக்கணக்கில் விலை போகிறது என்றும் அறிந்து கொள்கிறார் ஜெயம் ரவி. இந்த சிலையை சொந்தம் கொண்டாடும் அரசியல்வாதி கே எஸ் ரவிக்குமார். அரசியல்வாதியிடம் இருந்து பரம்பரைச் சொத்தை மீட்டாரா தன் நண்பனின் வீட்டை ஏலத்தில் இருந்து காப்பாற்றினாரா என்பதுதான் மீதிக்கதை.

‘வித்யாசமான கதை, புதிய முயற்சி என்றால் ஜெயம் ரவி ஒரு கை பார்ப்பவர் இந்தப் படத்திலும் சிறப்பாக செய்துள்ளார். இயந்திர வாழ்க்கையில் வாழும் மனிதனை ‘கோமாளி‘யாக பார்ப்பது முதல் மூணு நிமிடங்கள் மூச்சுத் திணறாமல் வசனம் பேசி கருத்து சொல்வது வரை என தன் பங்கை சரியாகக் செய்துள்ளார்.

காஜல் அவ்வப்போது வந்து செல்கிறார். பாலிவுட் தாக்கம் அப்பட்டமாகவெ உடலிலும், முகத்தில் தெரிய அந்நியமாக நிற்கிறார்.

சம்யுக்தா ஹெக்டே. ஸ்கூல் மாணவியாக மிக அழகாக நேர்த்தியாக தன் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் பாராட்டுக்கள்

யோகி பாபு ஒரு சில இடங்களில் சிரிப்பூட்டுகிறார். ரவிகுமார் அரசியல்வாதியாக மனதில் நிறைகிறார்.

ஒரு மாதம் பெட்டில் இருந்தாலே மீண்டும் நடக்க நமக்கு தடுமாற்றம் உண்டாகும். ஆனால் பதினாறு வருடங்கள் கழித்து கோமாவில் இருந்த ஜெயம் ரவி எதோ நேற்று தூங்கி இன்று எழுந்தது போல் எழுந்து அமர்கிறார் , படத்தின் மையக் கருத்தே கோமா தான் அதில் கொஞ்சம் மருத்துவ ரீதியான சில டீட்டைல்ஸ் அல்லது சிக்கல்களை கூறியிருக்கலாம். இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

ஸ்மார்ட் போன் துவங்கி , சென்னை வெள்ளம், கூவத்தூர் பஞ்சாயத்து வரை கதையைக் உண்மைச் சம்பவங்களுடன் இணைத்து மனிதம் பேசியது அருமை. ஆனால் திரைக்கதை எங்கேயோ சென்று, சுற்றி வருவது என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

பாடல்கள் ஹிப்ஹாப் ஆதி குறிப்பிடும்படியாக இல்லை. பின்னணி ஓகே. ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில் சென்னை வெள்ளம், ஃபிளாஷ் பேக் காட்சிகள் அருமை.

Conclusion:மொபைலுக்கு அடிமையாகாதே உண்மையான அன்புக்கு அடிமையாகு என வகுப்பெடுத்த வகையில் லாஜிக்குகளை மறந்து ஒருமுறை பார்க்கலாம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.