தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மருத்துவமனையில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சமீபத்தில் சென்னை, மணப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆசிரமம் கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதனை இயக்குநர் என்.லிங்குசாமி, உதயநிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதனையடுத்து பிரபல தொலைக்காட்சிக்கு இயக்குநர் லிங்குசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'அனைவரும் தியானம் செய்தால் மனநிம்மதி ஏற்படும். தற்போது முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ள ஸ்டாலின் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்.
அவர் ஒரு நாளும் முதலமைச்சராக முடியாது என்று சிலர் சொன்னார்கள். ஆனால், தற்போது ஒவ்வொரு நாளும், ஒரு நாள் முதலமைச்சர் போல் அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார்" எனக் கூறினார்.