ETV Bharat / sitara

நடிகர் ரகுமான் மகள் திருமண விழா: ஸ்டாலின் பங்கேற்பு! - ஏஆர் ரஹ்மான் இல்லத் திருமணவிழா

நடிகர் ரகுமானின் மகள் திருமண நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 9) கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

நடிகர் ரகுமான் மகள் திருமணவிழா; ஸ்டாலின் பங்கேற்பு!

author img

By

Published : Dec 10, 2021, 7:42 PM IST

சென்னையில் நடிகர் ரகுமானின் மகள் ருஷ்டா ரகுமான் - அல்தாப் நவாப் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது. இத்திருமணத்தில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு, மணமக்களுக்குப் பசுமைக் கூடை மரக்கன்றுகளைப் பரிசளித்து வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட பல முக்கியமானோர் கலந்துகொண்டனர். மணமகளின் தந்தையான ரகுமான், 'முள்ளே மலரே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சமீபத்தில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் காவல் துறை அலுவலராக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.

மேலும் இத்திருமணத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். ரகுமானின் மனைவி, ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி ஆகிய இருவரும் உடன்பிறந்தவர்கள் ஆவர்.

திருமண நிகழ்ச்சியில் மணமக்களுடன் மு.க. ஸ்டாலின் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: வெந்து தணிந்தது காடு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.