ETV Bharat / sitara

மதுவிலக்கை எதிர்த்து போராடும் "குடிமகன்"

மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன் "குடிமகன்" என்ற படத்தை இயக்கியுள்ளார்.

குடிமகன்
author img

By

Published : Mar 21, 2019, 4:48 PM IST

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் காதல் தோல்வியால் மதுபானக்கடையில் குடித்து விட்டு ஆட்டம் போடும் காட்சிகள் ஏராளம் வந்துள்ளன. ஆனால் மதுபானக் கடைகளை எதிர்த்தும் அதனை எதிர்த்து போராடும் மக்களின் வாழ்வியலை காட்டுவது அரிதான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன் "குடிமகன்" என்ற படத்தை இயக்கியுள்ளார்.

kudimakan movie stills
குடிமகன்

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் சார்பில் தயாரித்து அவரே இப்படத்தை இயக்கி உள்ளார். 'குடிமகன்' திரைப்படம் மதுவிலக்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு படமாக உருவெடுத்துள்ளது என்று சத்தீஷ்வரன் கூறினார். மேலும் இப்படம் குறித்து சத்தீஷ்வரன் கூறியதாவது;

'குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது என்கிற கருத்தினை மனதில் வைத்துக்கொண்டே இப்படத்தை இயக்கியுள்ளேன். விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்க்கையிலும் பேரிடி விழுகிறது. அரசியல் பலம் கொண்ட அந்த ஊர் கவுன்சிலர் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பெரும் அதிர்ச்சியைத் தருகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகின்றனர். எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்படி நாட்களும் கடந்து செல்ல செல்ல அந்த ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் குடிக்கு அடிமையாகின்றனர்.

கவுன்சிலரின் சூழ்ச்சியால் சிக்கிக் கொண்ட மக்களை திருத்த ஊர்த்தலைவரான அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் படத்தின் நாயகன் கந்தனும் பாழாய் போன இந்த குடிக்குள் சிக்கிக் கொள்கிறான். இதனால் கந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களை சந்திக்கின்றனர். கந்தனால் துயரத்தை சந்தித்து வந்த செல்லக்கண்ணு யாரும் எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர வைக்கிறாள். அதுவே படத்தின் கிளைமாக்ஸ்' என்று படத்தின் இயக்குநர் சத்தீஷ்வரன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, அய்யாவின் போராட்டம் வென்றதா?, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?, கந்தன் குடியிலிருந்து மீண்டானா? என்பதை எதார்த்தமான நகைச்சுவையுடன், உணர்வுப் பூர்வமாக இயக்கியுள்ளேன் என்று அவர் கூறினார். இப்படத்தில் "மது ஒழிப்பு போராளி" மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பவா லட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் "குடிமகன்"

இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில்,

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் 'குடிமகன்' படத்தை இயக்குனர் நர்சத்தீஷ்வரன் இயக்கும் இந்தப் படம் மதுவிலக்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு படமாக உருவெடுத்துள்ளது
குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி உள்ளார்.

 விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார் அந்த ஊர் கவுன்சிலர்.

 அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள்.  நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் குடிக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கவுன்சிலர் கடையை மாற்றாமல்இழுத்தடிக்கிறார். அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த குடிமகன்களில் ஒருவனாக கந்தனும் மாறிவிடுகிறான். இதனால் கந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களைசந்திக்கிறார்கள். ஒரு கட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர வைக்கிறாள் செல்லக்கண்ணு.

 அய்யாவின் போராட்டம் வென்றதா?, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?, கந்தன் குடியிலிருந்து மீண்டானா? என்பதை எதார்த்தமான நகைச்சுவையுடன், உணர்வுப் பூர்வமாக இயக்கியுள்ளதாக இயக்குநர் சத்தீஷ்வரன் தெரிவித்தார்.

 இப்படத்தில் கந்தனாக நடிகர் ஜெய்குமார் நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஆவார். செல்லக்கண்ணுவாக“ஈரநிலம்” ஜெனிபர் நடிக்கிறார். இவர்களுடன் “மது ஒழிப்பு போராளி” மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதபாத்திரத்தில் வைத்துள்ளனர் என்று தெரிவித்தார் 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.