கரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து மொழி படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. எப்போதும் பிஸியாக இருந்த திரைப்பிரபலங்கள் தற்போது வீட்டில் இருப்பதால் தங்களது மற்ற திறைமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மலையாள மொழி படத்தின் ஒளிப்பதிவாளர் பிரியன் வீட்டில் இருக்கும் நேரத்தில் மினியேச்சர் செட் உருவாகி வருகிறார்.
கிளைகள், வைக்கோல், அட்டை, மண் ஆகியவற்றை பயன்படுத்தி விதவிதமான பொருள்களை மினியேச்சர் பாணியில் உருவாகி வருகிறார்.
இதற்கிடையில் சமீபத்தில் பிரையன் தொலைக்காட்சியில் ’ஜங்கிள் புக்’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். உடனே அவரது மனதில் ’ஜங்கிள் புக்’ படத்தில் வரும் காட்டை மினியேச்சர் செட்டாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
இதையடுத்து தன்னிடம் இருந்த பொருள்களை வைத்து, ’ஜங்கிள் புக்’ படத்தில் தோன்றும் காடு, விலங்குகளை உருவாக்கி அசத்தியுள்ளார். இரவு, பகல் பாராமல் இரண்டு நாள்களில் இதை செய்து முடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்