எர்ணாகுளம்: கேரள அரசு திரையரங்குகளை திறக்க அனுமதியளித்துள்ளதால், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
புதிய திரைப்படங்களை வெளியிடுவது குறித்து இனிமேல்தான் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. இதற்காக திரையரங்க உரிமையாளர்கள் ஜனவரி 5ஆம் தேதி கொச்சியில் ஒன்றுகூடுகின்றனர். கேளிக்கை வரி தள்ளுபடி, மின்சார கட்டணம் மற்றும் கட்டடத்துக்கான ஒரு ஆண்டு வரியில் தள்ளுபடி என திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கேரள அரசிடம் 7 வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்ககுகள் திறக்கப்பட்டதையொட்டி கேரளாவிலும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது மாலிவுட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.