ETV Bharat / sitara

கோப்ராவுக்கு முன் ரிலீஸாகும் ‘சியான் 60’

author img

By

Published : Jun 20, 2021, 7:31 PM IST

விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்துக்காக முதன் முதலில் இணைந்து பணியாற்றுகின்றனர்.

chiyaan vikram 60
chiyaan vikram 60

சென்னை: கோப்ரா படம் வெளியாவதற்கு முன் விக்ரமின் 60ஆவது படம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கோப்ரா’. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணி இன்னும் முடியவில்லை என தெரிகிறது. கரோனா காரணமாக போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தள்ளிப்போய் இருக்கிறதாம். இதற்கு முன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் விக்ரமின் 60ஆவது படம் ரிலீஸாகிவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்துக்காக முதன் முதலில் இணைந்து பணியாற்றுகின்றனர். இதன் 50 சதவிகித படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டன. ஜூலை முதல் இதன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளன. எனவே கோப்ரா படத்துக்கு முன் இந்தப் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இது அல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் விக்ரம் முக்கிய வேடமேற்று நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனுஷின் தந்தையர் தின வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.