ETV Bharat / sitara

சத்தியமா #விக்ரம்58 அப்டேட் சீக்கிரம் வரும்... நம்புங்க பாஸ்!

author img

By

Published : Oct 2, 2019, 5:59 PM IST

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் #விக்ரம்58 படத்தை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

vikram 58

விக்ரம் நடிப்பில் வெளியான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து, விக்ரம் 'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய த்ரிலர் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படம் விக்ரமுக்கு 58ஆவது படமாகும். தற்காலிகமாக இப்படத்திற்கு '#விக்ரம் 58' என்று பெயர் வைத்துள்ளனர்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ - வியாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பாவனி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட கெட் அப்களில் விக்ரம் வருவதால் அவரது மேக்-அப்பில் தனி கவனம் செலுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை ஏப்ரல் 2020இல் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாப் ஹேர் கட்டிங்; கொஞ்சம் கொழு கொழு! வேற லுக்கில் மாறிய நஸ்ரியா

Intro:Body:

vikram 58

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.