தெலுங்கு மெகா ஸ்டார் சீரஞ்சிவி தனது 152 படமான 'ஆச்சார்யா' படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார்.
ராம் சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி, மோகன்லாலின் 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். படத்தின் படப்படிப்பு பணிகள் அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கின. இந்தப் படத்தையும் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரணின் கோணிடெலா நிறுவனம் தயாரிக்கிறது. இதனுடன் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
தற்போது 'காட்ஃபாதர்' எனப் படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து பாபி இயக்கத்தில் சிரஞ்சீவியின் 154ஆவது படம் குறித்தான அறிவிப்பு சிரஞ்சீவியின் பிறந்த நாளான நாளை ( ஆக. 22 ) வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'சிரஞ்சீவி 153' அப்டேட் : 'காட்ஃபாதர்' ஆன மெகா ஸ்டார்!
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'சிரஞ்சீவி 153' திரைப்படத்திற்கு 'காட்ஃபாதர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.