தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், சிரஞ்சீவி. இவர் தற்போது கொரட்லா சிவா இயக்கத்தில் உருவான 'ஆச்சார்யா' படத்தில் நடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மே 13ஆம் தேதி வெளியாக இருந்த இந்தப் படம், தற்போது கரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக புதிய வெளியீட்டு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலக தொழிலாளர்கள் கரோனா நெருக்கடியில் வேலையிழந்தபோது சிரஞ்சீவி, அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து தொழிலாளர்களுக்கும் நலிவடைந்த கலைஞர்களுக்கும் தொடர்ந்து உதவி புரிந்து வருகிறார்.
-
తోడ బుట్టిన బ్రదర్స్ కి , రక్తం పంచిన బ్లడ్ బ్రదర్స్ కి,
— Chiranjeevi Konidela (@KChiruTweets) May 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Happy Brothers day! pic.twitter.com/X6kmJKTo3P
">తోడ బుట్టిన బ్రదర్స్ కి , రక్తం పంచిన బ్లడ్ బ్రదర్స్ కి,
— Chiranjeevi Konidela (@KChiruTweets) May 24, 2021
Happy Brothers day! pic.twitter.com/X6kmJKTo3Pతోడ బుట్టిన బ్రదర్స్ కి , రక్తం పంచిన బ్లడ్ బ్రదర్స్ కి,
— Chiranjeevi Konidela (@KChiruTweets) May 24, 2021
Happy Brothers day! pic.twitter.com/X6kmJKTo3P
இந்நிலையில், இன்று (மே 24) சர்வதேச சகோதரர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் சிரஞ்சீவி, அவரது சகோதரர்கள் பவன் கல்யாண், நாகபாபு ஆகியோர் சிறுவர்களாக இருக்கும் கறுப்பு - வெள்ளை புகைப்படத்தைப் பதிவிட்டு சகோதரர் தின வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.