தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 152ஆவது படமான 'ஆச்சார்யா' படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார்.
இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்த படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கில்தான் படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.
இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டது.
இதற்கிடையில், ஆச்சார்யா டீசரும், ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
டீசரில் மே மாதம் 13ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக 'ஆச்சார்யா' திரைப்படம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
-
Talkie of the most awaited film #Acharya has been completed. Shooting of two songs is yet to be completed.
— Konidela Pro Company (@KonidelaPro) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Megastar @KChiruTweets @AlwaysRamCharan #KoratalaSiva @MsKajalAggarwal @hegdepooja #ManiSharma @DOP_Tirru @NavinNooli @sureshsrajan #NiranjanReddy @MatineeEnt @KonidelaPro pic.twitter.com/jpZEBTGFQ6
">Talkie of the most awaited film #Acharya has been completed. Shooting of two songs is yet to be completed.
— Konidela Pro Company (@KonidelaPro) August 4, 2021
Megastar @KChiruTweets @AlwaysRamCharan #KoratalaSiva @MsKajalAggarwal @hegdepooja #ManiSharma @DOP_Tirru @NavinNooli @sureshsrajan #NiranjanReddy @MatineeEnt @KonidelaPro pic.twitter.com/jpZEBTGFQ6Talkie of the most awaited film #Acharya has been completed. Shooting of two songs is yet to be completed.
— Konidela Pro Company (@KonidelaPro) August 4, 2021
Megastar @KChiruTweets @AlwaysRamCharan #KoratalaSiva @MsKajalAggarwal @hegdepooja #ManiSharma @DOP_Tirru @NavinNooli @sureshsrajan #NiranjanReddy @MatineeEnt @KonidelaPro pic.twitter.com/jpZEBTGFQ6
தற்போது இப்படத்தில் இரண்டு பாடல் காட்சிகளை தவிர மற்ற படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விரைவில் பாடல் காட்சிகளும் படமாக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள்: ஆந்திர அரசை பாராட்டிய சிரஞ்சீவி!