‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் புரமோஷனுக்காக பேசிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தனது மகன் ராம் சரண் நடித்து ‘RRR' படத்தின் காட்சி ஒன்றைப் பார்த்து கண்கலங்கியது பற்றி தெரிவித்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் பிரமாண்ட திரைப்படம் 'RRR'. இதன் பட்ஜெட் ரூ. 400 கோடியாகும்.
இந்த படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், சுதந்திர போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜுவாக நடித்துவருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தளத்துக்கு சிரஞ்சீவி சென்றுள்ளார். அப்போது ராம் சரண் கொடூரமாக தாக்கப்படும் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சியை பார்த்து சிரஞ்சீவி கண்கலங்கியிருக்கிறார்.
இதுகுறித்து மெகா ஸ்டார், நான் பார்த்தது படத்தின் மிக முக்கியமான காட்சி. அதற்கு பிறகு ராம் சரண் கதாபாத்திரத்தில் அபிரிவித மாற்றம் ஏற்படும். இந்திய சுதந்திரத்துக்காக வீரியமாக போராட வேண்டும் என்ற எண்ணம் சரண் கதாபாத்திரத்துக்கு தோன்றுவது அந்தக் காட்சியில்தான் என நெகிழ்ந்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு ஃபோன் செய்த சிரஞ்சீவி - மறுக்காமல் சம்மதம் தெரிவித்த கமல்ஹாசன்!