ETV Bharat / sitara

'சங்கத்தமிழன்' விஜய் சேதுபதியை இயக்கவுள்ள சேரன்

தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஹாட் டாபிக்காக மாறிய இயக்குநர் சேரன், அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்க இருக்கிறார்.

cheran
author img

By

Published : Nov 12, 2019, 1:53 PM IST

தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படியான சிறந்த திரைப்படங்களை அளித்த இயக்குநர்களில் ஒருவர் சேரன். பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தின் மூலமாக தனது பயணத்தை தொடங்கிய சேரன், பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து என திரை பொக்கிஷங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் சேரனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதன்பின் பல்வேறு படங்களில் நடித்த அவர் கடைசியாக ’திருமணம்’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் நடத்தப்படும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற சேரன் நீண்டநாட்களுக்குப்பின் தமிழ்நாட்டின் அனைவரது வீட்டிலும் பேசுபொருளாக இருந்தார்.

இதனிடையே சேரன் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதியின் படத்தை இயக்கப்போவதாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்தப் படத்தின் மீது அதிக கவனம் செலுத்திவருவதாக குறிப்பிட்ட சேரன், இது ஒரு முக்கியமான படமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ் சினிமாவின் பொக்கிஷ இயக்குநர் சேரனும், ஜனரஞ்சக ஹீரோ விஜய் சேதுபதியும் இணையவுள்ள இந்தத் திரைப்படம் எதுபோன்று இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிஸியான ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, நடிகர் விஜய்யின் 64ஆவது திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாது தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி தெலுங்கு படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அவர் நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகிறது.

அதே சமயத்தில் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் ஹீரோவாக நடித்துள்ள 'ராஜாவுக்கு செக்' படம் அடுத்த மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

*⭐விஜய் சேதுபதியுடன் 🤝இணையும் 🎥திரைப்படம் குறித்து 💺சேரன்*

தமிழ் சினிமா 😍ரசிகர்களை தன்னுடைய யதார்த்தமான படங்கள் மூலம் ஈர்த்தவர் இயக்குனர் 💺சேரன். இவர் பிரபல பொழுதுபோக்கு செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள 🎙பேட்டியில், விஜய் சேதுபதியை வைத்து தான் எடுக்க போகும் 🎬படத்தின் மீது கவனம் செலுத்தி வருவதாகவும். இந்தப் படத்திற்காக ⭐விஜய் சேதுபதியுடன் இணையும் நாட்கள் மிக முக்கியமானதாக 💪அமையும் எனவும் கூறினார். மேலும் தான் நடித்துள்ள 🎥'ராஜாவுக்கு செக்' திரைப்படம் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் வெளியாகும் எனவும் 🎙தெரிவித்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.