ETV Bharat / sitara

'பெற்றோர்களை ஆசிரமத்தில் சேர்ப்பது கொலைக்கு சமமானது..!' - ராகவா லாரன்ஸ் - தாய்' அமைப்பு

சென்னை: "செல்போனுக்கு கொடுக்கும் மரியாதை கூட பெற்றோர்களுக்கு இன்றைய தலைமுறையினர் கொடுப்பதில்லை. பெற்றோர்களை ஆசிரமத்தில் சேர்ப்பது கொலைக்கு நிகரான குற்றம்" என்று, நடிகர் ராகவா லாரன்ஸ் வேதனையுடன் தெரிவித்தார்.

ராகவா லாரன்ஸ்
author img

By

Published : May 12, 2019, 7:34 PM IST

மே 12 அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற பெற்றோர்களை காக்கும் நோக்கில் 'தாய்' அமைப்பை ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இதன் அறிவிப்பு மற்றும் தாயின் அன்பை எடுத்துச்சொல்லும் பாடல் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ், அவரின் தாயார் கண்மணி மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள உணர்வுப்பூர்வமான பாடல் குறுந்தகட்டை லாரன்ஸ் வெளியிட, பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் பெற்றுக் கொண்டனர்.

ராகவா லாரன்ஸ்
'தாய்' அமைப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், "இந்த ஆல்பத்தின் நோக்கமே, தாய் தந்தையரை யாரும் ஆசிரமத்திற்குள் விடக்கூடாது என்பதுதான். இன்றைய தலைமுறையினர் செல்போனுக்கு கொடுக்கும் மரியாதையை, தங்களது பெற்றோருக்கு கொடுப்பதில்லை. ஒரு சிலர், தங்களது தாய் தந்தையரை ஆசிரமத்தில் விட்டுவிட்டு சரியான நேரத்தில் பணம் அனுப்புகிறேன் என்று கூறுகின்றனர். இதையெல்லாம் தடுக்கும் வகையில்தான் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

ராகவா லாரன்ஸ்

இந்த உலகில் எல்லா ஆசீர்வாதங்களையும் விட தாயின் ஆசீர்வாதம் மிகப்பெரியது. அதை பிள்ளைகள் புரிந்து கொள்ளாமல் அப்பா அம்மாவை ஆசிரமத்தில் விடுவது ஒரு தவறான செயல். 'தாய்' அமைப்பு மூலமாக முதியோர்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடத்த திட்டமிட்டுள்ளேன். தனது ரத்தத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்த பெற்றோர்களை ஆசிரமத்தில் சேர்ப்பது கொலைக்கு நிகரான குற்றம்", என்றார்.

செல்போனுக்கு கொடுக்கும் மரியாதை கூட பெற்றோர்களுக்கு தற்போதைய தலைமுறையினர் கொடுப்பதில்லை ராகவா லாரன்ஸ் வேதனை.

மே 12 அன்னையர்  அன்னையர் தினத்தை முன்னிட்டு, ஆதரவற்ற பெற்றோர்களை காக்கும் நோக்கில் 'தாய்' அமைப்பை  துவங்கி உள்ளார் ராகவா லாரன்ஸ். இதன் அறிவிப்பு மற்றும் தாய் குறித்த விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ், அவரின் தாயார் கண்மணி மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அமைப்பிற்கான ஒரு உணர்வு பூர்வமான பாடல் அடங்கிய குறுந்தகட்டை லாரன்ஸ் வெளியிட பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், 

அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் இந்த ஆல்பத்தின் நோக்கம், பெற்றோர்களை ஆசிரமத்திற்குள் விடாதீர்கள் என்பதே ஆகும். ஒரு செல்போனுக்கு கொடுக்கும் மரியாதையை கூட பெற்றோருக்கு பிள்ளைகள் கொடுப்பதில்லை. சிலர் தாய் தந்தையரை ஆசிரமத்தில் விட்டுவிட்டு சரியான நேரத்தில் பணம் அனுப்புகிறேன் என்று கூறுகிறார்கள். இதையெல்லாம் தடுக்கும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கி உள்ளோம். எப்படி திறனாளிகளுக்கு என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி ஏற்படுத்தி ஏற்படுத்தியுள்ளேன் அதேபோன்று  கைவிடப்பட்ட பெற்றோர்களுக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.  அவர்களுக்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன் அது தற்போது நடை பெற்றது. மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு ஆசிரமத்திற்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு அம்மா என்னிடம் வந்து ஏன் என்னை விட்டுவிட்டு சென்று விட்டாய் என்று என்னை திட்டினார்கள். அந்த நிகழ்வு என் மனதில் மிகவும் வேதனையை 
உண்டாக்கியதால் இந்த அமைப்பை ஏற்படுத்தினேன். குழந்தைக்காக தன் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்வார்கள் பெற்றோர்கள். எல்லா ஆசீர்வாதங்களையும் விட தாயின் ஆசீர்வாதம் மிகப்பெரியது. அதை பிள்ளைகள் புரிந்து கொள்ளாமல் அப்பா அம்மாவை ஆசிரமத்தில் விடுவது ஒரு தவறான செயல் .இதை தடுக்கும் வகையில் ஒரு விழிப்புணர்வு புரோகிராம் நடத்த வேண்டும் என்று நினைத்தேன். அது பாடல் மூலமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துதான் இந்த ஆல்பத்தை உருவாக்கினேன். இந்த அமைப்பு மூலமாக முதியோர்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடத்த திட்டமிட்டுள்ளேன். என்னால் முடிந்த ஒரு சிறிய முயற்சி இதை நான் செய்வதற்கு காரணம் திருநங்கைகளுக்கு எப்படி காஞ்சனா படம் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம் அதேபோன்று இந்த தாய் பாடலை கேட்டு எவரேனும் ஒருவர் தன் பெற்றோர்களை ஆசிரமத்தில் இருந்து அழைத்து வந்து வீட்டில் வைத்துக் கொண்டாலே நான் வெற்றி பெற்று விட்டேன் என்று நினைப்பேன். நான் நினைத்துக் கொண்டிருப்பது அனைத்தும் எனது வாழ்வில் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் என் தாயின் ஆசிர்வாதம் தான் என்று கூறினார்

மேலும் இந்த பாடலை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப் நடத்த உள்ளோம். அமைப்பின் மூலம் உணவு கிடைக்காத பெற்றோர்களுக்கு உணவு வழங்க உள்ளோம், வயதான முதியவர்கள் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல விருப்பப்படுவார்கள் அவர்கள் என் அம்மா அழைத்துச் செல்ல உள்ளார்கள். அவை மட்டுமல்லாமல் விமானத்தில் பயணம் செய்ய விருப்பப்படும் முதியவர்களையும் விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்ய உள்ளோம்.  எனது தாயாருக்கு  சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பம் அதனால் அவர்கள் இதை முன்னின்று நடத்துவார்கள்.

இந்த தாய் விழிப்புணர்வு பாடலை எனது அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்வேன் பொதுவாக என்னுடைய படத்தில் எனது அறிமுக காட்சி குத்துப் பாடலாக துவங்கும் ஆனால் எனது அடுத்த படத்தில் இந்த தாய் பாடலுக்கு நான் ஆட உள்ளேன்

தனது ரத்தத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்த குழந்தைகள் பெற்றோர்களை கைவிடுவது மிகப்பெரிய குற்றம் இதற்கு இப்படி பெற்றோர்களை ஆசிரமத்தில் விடுபவர்கள் செய்யும் செயல் கொலைக்கு நிகரான குற்றம் மாகும் என்றார்.

நடிகர் ராகவ லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன் தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேட்டி மோஜோவில் அனுப்பி உள்ளேன்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.