ETV Bharat / sitara

சரத்குமார் மீதான காசோலை மோசடி வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் மீதான காசோலை மோசடி வழக்கை ரத்து செய்ய மறுத்து, ஆறு மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சைதாப்பேட்டை விரைவு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரத்குமார்
author img

By

Published : May 9, 2019, 12:42 PM IST

நட்சத்திர தம்பதிகளான சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், ரேடியன்ஸ் மீடியா நிதி நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட 1.50 கோடி ரூபாய் கடனுக்கு 2 காசோலைகளும், 50 லட்சம் ரூபாய் கடனுக்கு 10 லட்ச ரூபாய்க்கான 5 காசோலைகளும் நிதி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அதில், 7 காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பியதாக தங்கள் மீது மோசடி வழக்கை நிதி நிறுவனம் தொடர்ந்துள்ளது. கடந்த 2018-ல் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் உரிமையும், தங்களுக்கு சொந்தமான 3 சொத்துக்களின் உரிமையும் வழங்கப்பட்டது. அதை மறைத்து தங்கள் மீது நிதி நிறுவனம் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர், காசோலை மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ததும், வழக்கை மனுதாரர்கள் எதிர்கொண்டாக வேண்டும் என்றும், வழக்கை விசாரித்து வரும் சைதாப்பேட்டை விரைவு நீதிமன்றம் ஆறு மாதத்துக்குள் வழக்கின் விசாரணையை முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் மீதான காசோலை மோசடி வழக்கை ரத்து செய்ய மறுத்து 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சைதாப்பேட்டை விரைவு நீதிமன்றத்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

முன்னணி நடிகர்களான சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ரேடியன்ஸ் மீடியா நிதி நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட 1.50 கோடி ரூபாய் கடனுக்கு 2 காசோலையும், 50 லட்சம் ரூபாய் கடனுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான 5 காசோலையும் நிதி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 

அதில், 7 காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பியதாக தங்கள் மீது மோசடி வழக்கை நிதி நிறுவனம் தொடர்ந்துள்ளது.

கடந்த 2018 ல் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் உரிமையும், தங்களுக்கு சொந்தமான 3 சொத்துக்களின் உரிமையும் வழங்கப்பட்டது. அதை மறைத்து தங்கள் மீது நிதி நிறுவனம் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், காசோலை மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ததுடன் வழக்கை மனுதாரர்கள் எதிர்கொண்டாக வேண்டும் எனவும், வழக்கை விசாரித்து வரும் சைதாப்பேட்டை விரைவு நீதிமன்றம் 6 மாதத்துக்குள் வழக்கை விசாரத்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

Send from my iPhone

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.