வசூல்ராஜா MBBS திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமானவர் சத்யன் மகாலிங்கம். அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட போன்ற மொழிகளில் 100க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களாக முகநூல் பக்கத்தில், நேரலையில் பாட்டுபடி அசத்தியுள்ளார். 64 நாள்கள் பாட்டு பாடி சுமார் 15 லட்சம் ரூபாய்வரை சம்பாதித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஊரடங்கு சூழலால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மேடை மெல்லிசை கலைஞர்களின் நிலையைக் கண்டு முகநூலில் பாட்டு பாடி நிதி திரட்டுகிறேன்" என்றார்.