ஆரண்ய காண்டம் படத்தை இயக்கியதியாகராஜன் குமாரராஜா எட்டு வருடங்கள் கழித்து இயக்கியிருக்கும் படம்தான் சூப்பர் டீலக்ஸ். இந்தப்பத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்திரி, மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர்.
வரும் 29 ஆம் தேதி வெளியாக உள்ளஇந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப்பெற்றது. அதில் இடம் பெற்ற விஜய் சேதுபதி பேசும் வசனம் பலரை கலந்துரையாட செய்ததோடு, சமூக வலைதளங்களிலும் செம வைரலானது.
இந்நிலையில், தணிக்கை குழுவிற்கு சென்ற சூப்பர் டீலக்ஸ் படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், சுமார் 2 மணி நேரம் 56 நிமிடங்கள் படத்தின் நீளம் என்றும், எந்தக் கட்டும் தணிக்கை குழு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.