கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டன. திரையரங்குகள் திறந்தவுடன் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், முதல் படமாக சிவகார்த்திகேயனின் டாக்டர் இன்று (அக்.10) வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ள சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெற்றிப்பெற திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் சூர்யா
இன்று வெளியாகியுள்ள டாக்டர் படத்திற்கு என் அன்பு வாழ்த்துகள்.
இசையமைப்பாளர் அனிருத்
அனைவரையும் நேசிக்கிறேன். வேறு வார்த்தைகள் இல்லை. நெல்சன் மீண்டும் நீங்கள் நிரூபித்து காண்பித்துள்ளீர்கள்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
இன்றிலிருந்து டாக்டர் திரைப்படம். வாழ்த்துகள் சிவகார்த்திகேயன், நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் டாக்டர் படக்குழுவினர்கள் அனைவரும் சென்னை வெற்றி திரையரங்கில் படத்தை ரசிகர்களுடன் சென்று பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாக்டர்.. படம் எப்படி.. ரசிகர்கள் கருத்து