மும்பையை தலைமையிடமாக கொண்டு டாக்டர் ஸ்ரீகாந்த் பாஷி என்பவரால் 2014-ம் ஆண்டு கார்னிவெல் சினிமாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் கார்னிவெல் சினிமாஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உள்ளது.
இதுவரை 104 நகரங்களில் 400 முதல் 500 ஸ்கிரீன்களை நிறுவி பல மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களை நிர்வாகித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை செம்பரம்பாக்கம் ஈவிபி சிட்டியில், ஒரே வளாகத்தில் கார்னிவெல் சினிமாஸ் 6 ஸ்கிரீன்களுடன் திரையரங்குகளை திறந்துள்ளது.
தமிழக திரையரங்கங்களில் இதுவரை இல்லாத வசதியாக, மகளிருக்கென பிரத்யேகமாக பிங்க் பார்க்கிங் வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம், அரசு அறிவுரைத்த மாதிரி ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வார நாட்களில் 4 காட்சிகளும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 5 காட்சிகளும் திரையிடப்படவுள்ளது.
இதையடுத்து சென்னையில் ஈவிபி சிட்டியில் நடந்த கார்னிவெல் சினிமாஸ் தொடக்க விழாவை, ஈவிபி குரூப் நிர்வாகி ஈ.வி.பெருமாள்சாமி,சென்னை நிர்வாகி ஜுனித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
.அதன்பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கார்னிவெல் மேலாண்மை இயக்குநர் பி.வி.சுனில், கார்னிவெல் சென்னை நிர்வாகி ஜுனித் கூறியதாவது,
2012-ல் கொச்சியில் முதன் முதலாக ஒரு திரையரங்கு உருவாக்கப்பட்டது. இன்று சிங்கப்பூர் , மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய முழுவதும் பல்வேறு நகரங்களில் கிட்டத்தட்ட 500 ஸ்கிரீன்கள் உள்ளன. இன்னும் 2 வருடங்களில் 100 தியேட்டர்களை தமிழகத்தில் கார்னிவெல் உருவாக்கும். உலகளவில் 1000 திரையரங்குகள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், தமிழ்படங்கள் தயாரிப்பிலும், விநியோகத்திலும் நேரடியாக இறங்க உள்ளோம். பாப்கான் முதல் பார்கிங் வரை மற்ற மால்களை விட விலை மலிவாக தர பேசி வருகிறோம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ்.தாணு , பி.எல்.தேனப்பன் , விநியோகஸ்தர் அருள்பதி , இயக்குநர்கள் மிஷ்கின், ராம்,பாபு கணேஷ் , நடிகர்கள் வைபவ், செளந்திரராஜன்,'பேரன்பு ' சாதனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொண்டனர்.