நவரச நாயகன் கார்த்திக் நடித்த 'நந்தவன தேரு' படம் மூலம் நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் பிருந்தா. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்டோர் நடித்த படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களிலும் பணியாற்றுகிறார்.
இவர் தற்போது புதிதாக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி என்று இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்த இசையமைக்கிறார்.
-
Super excited to announce our first Tamil film #HeySinamika with top talent @dulQuer @MsKajalAggarwal @aditiraohydari. Directed by ace choreographer turned director @BrindhaGopal1, the romantic comedy goes on floor today. @JioCinema @globalonestudio pic.twitter.com/NJA8QBxNxY
— Jio Studios (@jiostudios) March 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Super excited to announce our first Tamil film #HeySinamika with top talent @dulQuer @MsKajalAggarwal @aditiraohydari. Directed by ace choreographer turned director @BrindhaGopal1, the romantic comedy goes on floor today. @JioCinema @globalonestudio pic.twitter.com/NJA8QBxNxY
— Jio Studios (@jiostudios) March 12, 2020Super excited to announce our first Tamil film #HeySinamika with top talent @dulQuer @MsKajalAggarwal @aditiraohydari. Directed by ace choreographer turned director @BrindhaGopal1, the romantic comedy goes on floor today. @JioCinema @globalonestudio pic.twitter.com/NJA8QBxNxY
— Jio Studios (@jiostudios) March 12, 2020
'Hey Sinamika' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் துவங்கியுள்ளது. படத்தின் படப்பிடிப்பை நடிகையும், பிருந்தாவின் நெருங்கிய நண்பருமான குஷ்பூ கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதல் முறையாக இயக்குநராக களமிறங்கியுள்ள பிருந்தா படத்தின் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் விரைவில் படத்தின் கூடுதல் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காவல் துறையின் காட்டப்படாத பக்கத்தைக் காட்டியிருக்கும் 'காவல்துறை உங்கள் நண்பன்'