ETV Bharat / sitara

போஸ் வெங்கட் இயக்கும் 'கன்னி மாடம்' - புது அப்டேட்

நடிகர் போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகமாகும் 'கன்னி மாடம்' படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Bose Venkat
Bose Venkat
author img

By

Published : Jan 31, 2020, 11:12 AM IST

Updated : Jan 31, 2020, 12:41 PM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'மெட்டி ஒலி' தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகர் போஸ் வெங்கட். தொடர்ந்து பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த அவர், பாரதிராஜாவின் 'ஈரநிலம் படம்' மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

2003ஆம் ஆண்டுக்குப் பிறகு 'சிந்தாமல் சிதறாமல்', 'தலைநகரம்' உள்ளிட்ட படங்களில் நடித்ததைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான 'சிவாஜி' படம் மூலம் பிரபலமடைந்தார்.

வில்லன், குணச்சித்திர வேடங்களை மையமாக வைத்தே நடித்துவரும் போஸ் வெங்கட், 'சரோஜா', 'சிங்கம்', 'கோ', 'வை ராஜா வை', 'கவண்', 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Bose Venkat
நடிகர் போஸ் வெங்கட்

இதனிடையே தற்போது இயக்குநராக அறிமுகமாகும் போஸ் வெங்கட், 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகனாக ஸ்ரீராம் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக காயத்ரி அறிமுக நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் தயாரித்துள்ளார். 'ஆடுகளம்' முருகதாஸ், கஜராஜன், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரி சாய் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி, தற்போது அதன் இறுதி கட்டப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.

போஸ் வெங்கட் தனது ஆரம்பக் காலங்களில் சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக இருந்தபோது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கியுள்ளார். தனது பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தையே படமாக்கியுள்ளதாகவும் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.

Bose Venkat
போஸ் வெங்கட் இயக்கும் 'கன்னி மாடம்'

முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விரைவில் நிறைவடையும் நிலையில் வரும் பிப்ரவரி மாதம் திரைக்குவரவுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க...

காதலர் தினத்தைக் குறி வைக்கும் ஆறு படங்கள்!

Intro:Body:

Bose Venkat Debutant in Direction is ' kanniMadam'

Conclusion:
Last Updated : Jan 31, 2020, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.