'யோகி' படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்த கவிஞர் சினேகன், அதன்பின் 'உயர் திரு 420' என்ற படத்தில் நடித்தார், அது வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. மேலும், இவர் படத்தில் நடித்து பிரபலமானதைவிட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் தனது கட்டிப்பிடி வைத்தியத்தால் தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமானர்.

அதன்பின் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் செயற்குழு உறுப்பினராக இணைந்து அரசியலிலும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தற்போது இயக்குநர் ரமேஷ் மகராஜன் இயக்கத்தில் சினேகன் 'பொம்மி வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். உழவன் திரைக்களம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் வெளியிட்டனர்.