ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு, தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
லைகா நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திருந்து புகைப்படங்கள் கசிந்த வண்ணம் இருப்பதால், படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதனால் படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜாட்டின் சர்னா இணைந்துள்ளார். இவர் தர்பார் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.