ETV Bharat / sitara

விமர்சனங்களுக்கு 'END CARD' போட்ட ப்ளூ சட்டை! - ப்ளூ சட்டை

தொடர்ந்து தனது திரைப்பட விமர்சனங்களுக்காக சில மக்களால் வெறுக்கப்பட்ட பிரபல யூ ட்யூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தான் இயக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறார்.

Blue sattai maran
author img

By

Published : Oct 22, 2019, 9:45 PM IST

"இந்தச் 'செக்கச்சிவந்த வானம்' 2018ல ரிலீஸ் ஆகிருக்கு, ஆனா 2013லயே ஒரு கொரியா கார பயபுள்ள, இந்தக் கதைய களவாண்டு 'நியூ வேர்ல்ட்' அப்படின்னு டைட்டில் வெச்சு, படத்தையே ரிலீஸ் பண்ணிப்புட்டாய்ங்க! 2018ல வந்த படத்த 2013லயே களவாண்டுருக்கான்னா, இந்தக் கொரியா கார பயபுள்ள எப்பேர்ப்பட்ட களவாணி பயலா இருந்துருப்பான்னு பாத்துக்கோங்க!" இப்படி மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த 'செக்கச்சிவந்த வானம்' திரைப்படத்தை கலாய்த்து விமர்சனம் செய்திருந்தார் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.

Blue sattai maran
ப்ளூ சட்டை மாறன்

சமீபகாலமாக திரைப்படங்களின் விமர்சனங்கள் பெருகிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக சமூக வலைதளங்களும் விமர்சனங்களால் நிரம்பிக்கொண்டே செல்கிறது.

ஒரு திரைப்படத்திற்கு போகலாமா வேண்டாமா என மக்கள் முடிவு செய்ய முக்கிய வழிகாட்டியாக இருப்பதே திரைப்பட விமர்சனங்கள்தான். முக்கியமாக யூ ட்யூபில் பிரசாந்த், ப்ளூ சட்டை மாறன் போன்ற பிரபல விமர்சகர்களின் விமர்சனத்தை கேட்கவே தனிக்கூட்டம் இருக்கிறது. அதே சமயம் அவர்கள் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளும் எண்ணிலடங்காதவை.

பணம் பெற்றுக்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள் அல்லது 'இவ்ளோ கொற சொல்றியே, முடிஞ்சா நீ ஒரு 'நல்ல' படம் எடுத்துக் காட்டு பாக்கலாம்' என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மீது விழத்தான் செய்கிறது. குறிப்பாக விஜய், அஜித் என்று முன்னணி நடிகர்கள் பலரின் திரைப்படங்களையும் 'சர்க்காசம்' செய்யும் ப்ளூ சட்டை மாறனை 'நல்ல' படம் எடுக்கச்சொல்லி சவால் விட்ட பலரின் வாய்களை அடக்கும் வண்ணம் சில நாள்களுக்கு முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் தான் படம் எடுக்க முன்வருவதாகத் தெரிவித்திருந்தார்.

Blue sattai maran
ப்ளூ சட்டை மாறன்

தற்போது தனது முதல்கட்ட படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார். ஹீரோ, ஹீரோயின், கதைக்களம் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் விடாமல் சஸ்பென்சாகவே வைத்திருக்கிறார் மாறன். அதுசரி, இப்போ அவர் படத்துக்கு யார் விமர்சனம் பண்றது?

இதையும் படிங்க: பல சிக்கல்களுக்குப் பின் 'ஆதித்யா வர்மா', வெளிவந்தது இசை!

Intro:Body:

Wrapped first schedule of #BlueSattaiMaran film. Cast and crew announcement will take place soon. Directed by

@tamiltalkies

#VHouseProductions

@sureshkamatchi

@johnmediamanagr

https://twitter.com/rameshlaus/status/1186597878531158016

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.