ETV Bharat / sitara

மான் வேட்டையாடிய வழக்கு: கேங்ஸ்டருக்கு பயந்து நீதிமன்றம் வராத சல்மான் கான்!

மான் வேட்டையாடிய வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கூறி மேல் முறையீடு செய்த சல்மான் கான், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஜகா வாங்கியுள்ளார்.

Blackbuck case: Salman Khan
author img

By

Published : Sep 27, 2019, 2:04 PM IST

1998ஆம் ஆண்டு படப்பிடிப்புக்காக ஜோத்பூர் சென்ற சல்மான் கான், சயிஃப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். பிளாக்பக் (Blackbuck ) என்னும் அரியவகை மான் இனத்தைச் சேர்ந்த இரண்டு மான்களை வேட்டையாடியதாக அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

நீண்டகாலமாக நிலுவையில் கிடந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பு வெளியானது. அதில் சல்மான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். குற்றஞ்சுமத்தப்பட்ட சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட சல்மான் கான் பிணையில் வெளியே வந்தார்.

பிணையில் வெளியே வந்த சல்மான் கான், தனது தண்டனைக்கு எதிராக ஜோத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில் சல்மான் வேட்டையாடிய அரியவகை மானை தெய்வமாக வழிபடும் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் என்னும் பிரபல கேங்ஸ்டரிடமிருந்து சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

லாரன்ஸ் பிஷ்னோய் குழுவைச் சேர்ந்த கேரி ஷீட்டர் என்னும் ரவுடி, சல்மான் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு நேரடி கொலைமிரட்டல் விடுத்தார். நீதிமன்றம் தண்டிக்காவிட்டாலும், சல்மான் கானை நாங்கள் நிச்சயமாக கொலை செய்வோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

Blackbuck case: Salman Khan
Blackbuck case: Salman Khan

மான் வேட்டையாடிய வழக்கில் மேல்முறையீடு செய்த சல்மான் கான், கொலை மிரட்டலுக்குப் பயந்து இதுவரை ஒருமுறை கூட ஆஜராகவில்லை. இன்று ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சல்மான் கான், மீண்டும் ஜகா வாங்கியுள்ளார். எனவே டிசம்பர் 19ஆம் தேதி ஆஜராகும்படி ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தானை உலுக்கிய கண்டீல் பலோச் கொலை வழக்கு - சகோதரருக்கு ஆயுள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.