மார்வெல் ஸ்டுடியோசின் 'ப்ளாக் விடோ' திரைப்படம் இந்தியாவில் அமெரிக்காவுக்கு ஒரு நாள் முன்னதாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மளையாளம், கன்னடா ஆகிய ஆறு மொழிகளிலும் வரும் ஆண்டு ஏப்ரல் 30இல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அயன் மேன்', 'கேப்டன் அமெரிக்கா', 'தோர்', 'ப்ளாக் பாந்தர்', 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்', 'கேப்டன் மார்வல்' ஆகிய மார்வலின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்ற நிலையில் அந்த வரிசையில் 'ப்ளாக் விடோ' திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றது.
இந்தப் பாத்திரத்தில் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரில்' ப்ளாக் விடோவாக நடித்த ஸ்கார்லெட் ஜோஹான்சன், ப்ளாக் விடோவிலும் நடித்திருக்கிறார். அவெஞ்சர்ஸில் முக்கிய பாத்திரமாக வந்த ப்ளாக் விடோவின் வாழ்க்கை பின்புலத்தை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
ப்ளாக் விடோவின் கதை கேப்டன் அமெரிக்காவின் சிவில் வார்ருக்கு பின்பும், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாருக்கு முன்பும் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் 'அயன் மேன்' பாத்திரம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பது ரசிகர்களின் கூடுதல் எதிர்ப்பார்பாக உள்ளது.
இதையும் படிங்க: இப்போதுதான் சினிமா மீது காதல் வந்துள்ளது - உண்மையை சொன்ன நித்யா மேனன்