ETV Bharat / sitara

திருவள்ளுவர் அவதாரம் எடுக்கும் தமிழ்ப் புலவர் 'ஹர்பஜன் சிங்' - திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ்

'திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ்' என்ற புதிய காமெடி வெப் சீரிஸில் திருவள்ளுவர் கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறார்.

Harbhajan Turbanator
Harbhajan Turbanator
author img

By

Published : Dec 17, 2019, 10:54 AM IST

இணைய உலகில் இளைஞர்களின் விருப்பமான யூடியூப் சேனல் பட்டியலில் பிளாக் ஷீப்(Black Sheep) இடம்பெற்றுள்ளது. ஆர்.ஜே. விக்னேஷ், அரவிந்த் உள்பட பல இளைஞர்கள் இந்தச் சேனலை நடத்தி வருகின்றனர்.

சித்து விளையாட்டு, அன்பு அன்ஃபோல்டு, தனி ஒருவன், இது அது இல்ல உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி இளைஞர்களின் பேராதரவை பிளாக் ஷீப் பெற்றுள்ளது.

தற்போது பிளாக் ஷீப் குழு புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

'திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ்' என்ற புதிய வலைத்தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் திருவள்ளுவராக நடிக்கிறார். இந்த வலைத் தொடரை டியுட் விக்கி இயக்குகிறார். 10 பகுதிகளைக் கொண்ட முதல் சீசன் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

Harbhajan Turbanator
ஹர்பஜன் சிங்

மீட் மிஸ்டர் திருவள்ளுவர் என்ற தலைப்பில் உருவாகிவரும் இந்தத் தொடரில், இளைய தலைமுறைகள், குறிப்பாக ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை திருக்குறள் வாயிலாக ஹர்பஜன் சிங் தன் ஸ்டைலில் சொல்லயிருக்கிறார். இவருடன் ஆர்.ஜே.விக்னேஷ் மற்றும் சுட்டி அரவிந்த் நடிக்கின்றனர்.

Harbhajan Turbanator
பிளாக் ஷீப் குழுவுடன் இயக்குநர் சேரன்

இதன் தொடக்க விழா சென்னை ஃபோரம் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பிளாக் ஷீப் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Harbhajan Turbanator
திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ் அறிமுக விழா

இதையும் படிங்க...

மிருகங்களுடன் பேசும் 'ஜுனியர் ராபர்ட் டவுனி'யின் 'டூலிட்டில்' - போஸ்டர்கள் வெளியீடு

Intro:திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்.Body:இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல இளைஞர்கள் அந்தச் சேனலை நடத்தி வருகின்றனர்.

தற்போது பிளாக் ஷீப் குழு புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா சென்னை சென்னை போரம் மஹாலில் நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப் படுத்தப்பட்டது.

பிளாக் ஷீப்பின் அடுத்த 6+1 பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது

"திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ்" சிஎஸ்கே அணியில் சுழர்பந்து வீச்சாளராக இருக்கும் ஹர்பஜன் சிங் திருவள்ளூவராக நடிக்கும் வலைத் தொடர் ஒன்றை DUDE விக்கியின் இயக்கத்தில் தயாரிக்க உள்ளது. இந்த வலைத்தொடரின் 10 பகுதிகளை கொண்ட முதல் சீசன் வரும் பிப்ரவரி 2, 2020 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. திருவள்ளுவர் ஆக நடிக்கும் ஹர்பஜன் சிங்

இளைய தலைமுறைகள், குறிப்பாக ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை திருக்குறள் வாயிலாக ஹர்பஜன்சிங் தன் ஸ்டைலில் சொல்லயிருக்கிறார். இவருடன் ஆர் ஜே விக்னேஷ் மற்றும் சுட்டி அரவிந்த் நடிக்கிறார்கள். இந்த வலைத் தொடரின் தலைப்பு மீட் மிஸ்டர் திருவள்ளுவர்.

2. "பிளாக் ஷீப் டிஜிட்டல் விருதுகள்"
3."பிளாக் ஷீப் வேல்யூ" புதிய ஆப்.
4."பிளாக் ஷீப் F3" என்ற பெயரில் மாநில அளவிலான கல்லூரி திறமைத் திருவிழாவை நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு பிளாக் ஷீப்பில் இணையும் வாய்ப்பு. 5."பிளாக் ஷீப் ரீவேம்ப்"
6."ஆண்பாவம்" ஒரு ஆண் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளை வேடிக்கையான முறையில் விவாதிக்க வரும் நிகழ்ச்சி. ஆண் பாவம். இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் கதாநாயகனான டாக்டர் சேதுராமன் நடிப்பில், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் தன் முத்திரியை பதித்த கார்த்திக் வேணுகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. 12 பகுதிகளை கொண்ட இந்த தொடரின் முதல் சீசன் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் வெளியாக இருக்கிறது.

மற்றும்
பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, தேவை, ரசனை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், நட்பு மற்றும் இன்றைய சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் பதிவு ஒன்றை தயாரிக்க உள்ளனர். ஒட்டு மொத்த பிளாக் ஷீப் நட்சத்திரங்களும் நடிக்க, பிளாக் ஷீப் அயாசும், மைக் செட் ஸ்ரீராமும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இத்திரைப்படம் கோடை விடுமுறையை குறிவைத்து வெள்ளித்திரைக்கு தயாராகிறது.

Conclusion:விழாவில் இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோஉள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.