ETV Bharat / sitara

பிளாக் ஷீப் யூடியூப் சேனல் தயாரிக்கும் படம் பூஜையுடன் தொடக்கம் - யூடியூப் பிரபலம் ராஜ்மோகன்

யூடியூப் பிரபலங்கள் பலர் திரைப்படங்களில் தோன்றி திரைநட்சத்திரங்களாக மாறி வரும் வேளையில், புகழ் பெற்ற பிளாக் ஷீப் யூடியூப் சேனல் பள்ளி வாழ்க்கையை மையமாக வைத்து புதிய படத்தின் தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளது.

Black sheep team
Black sheep Youtube channel first production venture
author img

By

Published : Mar 11, 2020, 7:05 PM IST

சென்னை: பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னை தரமணியில் இன்று நடைபெற்றது.

ஸ்கூல் மூவி என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிளாக் ஷீப் புரொடக்‌ஷன் நிறுவனத்தோடு இணைந்து, ராக்போர்ட் என்டெர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கிறார். இதையடுத்து படத்தின் பூஜை சென்னை தரமணியிலுள்ள எம்ஜிஆர் ஃபிலிம் சிட்டியில் அதிகாலை நான்கு மணிக்கு நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்‌ஷன்ஸ் கலை, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

புட் சட்னி, தமிழ் வணக்கம் என யூடியூப் சேனல்களின் மூலம் பிரபலமான பேச்சாளர் ராஜ்மோகன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.

Black sheep team
Sivakarthikeyan in Bilack sheep team movie pooja

பொதுவாக பள்ளிக்கூட திரைப்படம் என்றால் பழைய நினைவுகள் குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்தத் திரைப்படம் 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.

இதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி கலைஞர்கள் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

Black sheep team
Black sheep Youtube channel first production venture

யூடியூப் உலகிலிருந்து பல நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஒரு யூடியூப் சேனல் சொந்தப்பட தயாரிப்பில் இறங்கியிருக்கிறது. இது அடுத்த தலைமுறை சினிமா வரவுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது. இப்படம் ஜூன் மாதம் வெள்ளித்திரைக்கு வரவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.