'தெறி', 'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருந்தார். ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
மேலும் இவர்களுடன் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
தீபாவளி விருந்தாக வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ரசிகர்கள் மத்தியில் ராயப்பன் கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. அதேபோல் விஜய் குரலில் பாடிய வெறித்தனம் பாடல் அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
-
Big fan of this little guy here ❤️ I promised him, i’ll make a single with him & its done 😊 pic.twitter.com/UJhxTk43Ro
— Hiphop Tamizha (@hiphoptamizha) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Big fan of this little guy here ❤️ I promised him, i’ll make a single with him & its done 😊 pic.twitter.com/UJhxTk43Ro
— Hiphop Tamizha (@hiphoptamizha) November 23, 2019Big fan of this little guy here ❤️ I promised him, i’ll make a single with him & its done 😊 pic.twitter.com/UJhxTk43Ro
— Hiphop Tamizha (@hiphoptamizha) November 23, 2019
இப்பாடலில் விஜய்யுடன் பூவையார் என்னும் கானா சிறுவனும் இணைந்து பாடியிருப்பார். 'மாலு மாலு மாலு என் தளபதி தான் தூளு' என்று அவர் பாடிய வரிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.
தற்போது இவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் பாடல் ஒன்றில் பாட உள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இச்சிறுவனின் மிகப்பெரிய ரசிகன் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பட்ட ரியாலிட்டி ஷோ மூலம் கானா பாடல்களை தனக்கே உண்டான ஸ்டைலில் பாடி அசத்திய இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.