அட்லி - விஜய் கூட்டணியில் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'பிகில்' தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் சனிக்கிழமை மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்த ட்ரெய்லர் இதுவரை 2.2 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் காணொலி ஒன்றை வெளியிட்டு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.