அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக பணிபுரியும் படம் 'பிகில்'. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இத்திரைப்படத்தில் நயன்தாரா, இந்துஜா உள்ளிட்ட பல நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் இந்த ப்ராஜெக்டில் இணைந்திருக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தீபாவளி அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள ’பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
மலேசிய விமான நிலையம் மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நாளை (செப்டம்பர் 27) மலேசிய விமான நிலையத்தில் ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் சில பகுதிகள் படமாக்கப்படவுள்ளன. செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் அமெரிக்கன் கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'பொன்னியின் செல்வனுக்கு' மணிரத்னம் எங்க போறார்னு தெரியுமா?