நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி திரைக்குவருகிறது. இதனிடையே பிரபல வைரல் ஜோதிடர் சேலம் பாலாஜி ஹாசன் இந்தப் படம் பற்றி கணித்துள்ளார். பிகில் வசூல் ரீதியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக வெற்றியடையும் என்றும், அந்தப் படத்தில் வேலை பார்த்திருக்கும் அனைவருக்குமே வெற்றியை ஏற்படுத்தித் தரும் எனவும் தெரிவித்திருக்கிறார். விஜய், அட்லி, நயன்தாரா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோரின் ஜாதகங்களை மையமாக வைத்து இதனை கணித்ததாக பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.
முன்பெல்லாம் இவரது கணிப்புகள் அப்படியே நடந்திருப்பதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மோடி மீண்டும் பிரதமர் ஆவார், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆவார், ஆர்யாவுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும் உள்ளிட்ட இவரது பல்வேறு கணிப்புகள் சொன்னது சொன்னபடி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரொனால்டோ மெஸ்ஸிலாம் வீட்டுக்கு போயிடுங்க... 'பிகில்' ஆடும் புட்ஃபால் வெறித்தனம்!