ETV Bharat / sitara

மனித-விலங்கு மோதல் பேசும் 'ராஜபீமா' - ட்ரெய்லர் வெளியீடு! - மனித-விலங்கு மோதல் கதைக்களம்

ஆரவ் நடிக்கும் ராஜபீமா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Rajabheema
Rajabheema
author img

By

Published : Dec 14, 2019, 3:12 PM IST

Updated : Dec 14, 2019, 3:26 PM IST

நடிகர் ஆரவ், ஆஷிமா நர்வால், யாஷிகா ஆனந்த், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், சாயாஜி ஷிண்டே,யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் படம் ராஜபீமா.

யானைக்கும் மனிதனுக்குமான உறவு, வனத்தில் ஏற்படும் மனித-விலங்கு மோதல், யானை தந்தம் கடத்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.

Rajabheema
ஆரவ் நடிக்கும் ராஜபீமா

சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்கும் இப்படத்திற்கு, சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர். சதிஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்படம் பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் தாய்லாந்தின் சில பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் இறுதிகட்டப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது படக்குழு இரண்டு நிமிட ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.

பிரபு சாலமனின் கும்கி திரைப்படத்தை தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு யானையை மையமாக வைத்து ராஜபீமா படம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க...

பேயதான் காதலிச்சேனா? - 'ஆயிரம் ஜென்மங்கள்' ட்ரெய்லர் வெளியீடு!

Last Updated : Dec 14, 2019, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.