ETV Bharat / sitara

BB Day 61- Prank ஷோவால் வெளிவந்த உண்மை... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - பிக்பாஸ்

பிரேக்கிங் நியூஸ் டாஸ்கில் தாமரையை எளிதாக கோபமாக்கிவிடலாம் என்பதை பிரியங்கா எளிதாக நேற்றைய (டிசம்பர் 2) எபிசோட்டில் வெளிக் காண்பித்துள்ளார்.

பிக்பாஸ்
பிக்பாஸ்
author img

By

Published : Dec 3, 2021, 2:48 PM IST

இந்தவாரம் முழுவதும் ஒரே பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கை மட்டுமே ஓட்டிக்கொண்டிருந்தார் பிக்பாஸ். பாவம் கன்டெண்ட் இல்ல போல. ஆனால் இந்த டாஸ்க் மூலம் நடந்த ஒரேநல்ல விஷயம் பலரின் இரண்டாவது முகம் வெளிவந்தது. சரி வாங்க என்ன நடந்தது நேற்றைய எபிசோட்டில் என்பதை காண்போம்.

மீண்டும் அதே பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்குடன் நேற்றைய (டிச.2) நாள் தொடங்கியது. சரி இன்றைக்காவது எதாவது சுவாரஸ்யமாகச் செய்யுங்கள் என மனது முணுமுணுத்தது.

ரெட் சானல் தங்களது பிரேக்கிங் நியூஸை வாசித்தனர். இவர்கள் கொடுக்கும் தலைப்புகளுக்கே தனி மதிப்பெண் கொடுக்கலாம் போல. அதிலும் அபிஷேக் இருக்கும்போது சொல்லவா வேண்டும். அதன்படி, 'போட்டியாளர்களை வெளியே ஸ்கீரின் போட்டு தள்ளப்படுவதைக் கிண்டலடித்தனர். இரண்டாவதாக அக்‌ஷரா தங்களுக்கு பிடித்தமான இரண்டு பேர்களுக்கு மட்டும் டபுள் ஆம்லேட்கொடுப்பது. அபினய்யை காவு வாங்கப் போகிறரா பாவனி?. தாமரையிடம் நிரந்தரமான அன்பை எப்படிப் பெறுவது? என கேள்விகளை வரிசையாக முன்வைத்தனர்.

தாமரையை அழைத்து, "அனைவரும் உங்கள் கேம் பிளானை பாராட்டுகின்றனர். அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?" என்ன ரெட் அணி கேள்வி கேட்டனர். இதற்கு அவர், "என்னுடைய அப்பா பெயர் தெரியுமா. தெரியாதுல்ல. அதே மாதிரி தான் எனக்கு தெரியாத விஷயத்தைக் கேட்டு தெரிந்துக் கொள்கிறேன்" என்றார். நடுவே வந்த சிபி, தாமரையிடம் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டார். இதனால் ரெட் அணிக்குள் பலத்த சண்டை ஏற்பட்டது.

உடனே அபிஷேக்கும், பிரியங்காவும் "எழுதிக் கொடுத்ததை தவிர மற்ற கேள்விகளை ஏன் கேட்கிறாய்" என்றனர். இதனால் அவர்கள் அணிகளுக்குள் பலத்த சண்டை ஏற்பட்டது.

அப்போது நடுவே நுழைந்த தாமரை, "பிரியங்கா நீ யார் என்பது தெரியும். உன் ஆட்டம் என்னிடம் செல்லாது. பாசம் காண்பித்து நடிப்பவள் நீ" எனக் கொந்தளித்தார். ரெட் அணி விரித்த வலை என்பது தெரியாமல், அவர் வலையில் சிக்கினார். இவர்கள் போட்ட சண்டை சத்தத்தைக் கேட்டு தயவு செய்து எல்லாரும் வால்யூமை குறைத்து வைங்க பா... நமக்கு தோன்றியிருக்கும். இறுதியில் தான் தெரிந்தது அவர்கள் செய்ததது prank-ஆம்.

ரெட் அணியைத் தொடர்ந்து ப்ளூ அணி வழக்கம் போல் சுமாராகவே பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கை செய்தனர். இறுதியாக இரண்டு அணிகள் செய்த செயல்பாடுகளைப் பார்த்த சஞ்சீவ், "ரெட் சேனல் அதிகமான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றது" என அறிவித்தார்.

இந்த பிரேக்கிங் நியூஸ் டாஸ்க் மூலம் இரண்டு விஷயங்கள் தெரியவந்தது. என்ன சொன்னாலும் தாமரையை எளிதாக கோபமாக்கிவிடலாம் என்பதும், பிரியங்கா - அபிஷேக் கூட்டணி போட்டால் யாரை வேண்டுமானாலும் வைச்சி செய்துவிடுவார்கள் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: BB Day 59 - பிரேக்கிங் நியூஸால் இரண்டாகப் பிரிந்த பிக்பாஸ் வீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.