'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் 'சாண்டி'. இவர் இதற்கு முன்பாக 'காலா', 'சங்கத் தமிழன்', 'கபாலி' உள்ளிட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
இவர் 2017ஆம் ஆண்டு டோரோத்தி சில்வியா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில், லாலா என்ற பெண் குழந்தை உள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்நிலையில் தனக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை நேற்று (ஜூலை 22) பிறந்திருப்பதாக சாண்டி தனது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். அதில், "எனக்கு ராஜா பிறந்துவிட்டான். நன்றி கண்ணம்மா" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பைக் கண்ட ரசிகர்கள், திரையுலகினர் பலரும் அத்தம்பதிக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: யு/ஏ சான்றிதழ் பெற்ற ஹன்சிகாவின் 50ஆவது படம்