ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷின் 40ஆவது படமான இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டன், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில், மே 1ஆம் தேதி திரைக்கு வரவிருந்த இப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப்போனது.
-
#bujji video song from jagame thandhiram on 13 November 2020 #suruliswag @karthiksubbaraj @Music_Santhosh @sash041075 pic.twitter.com/rjsTBVg5u8
— Dhanush (@dhanushkraja) November 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#bujji video song from jagame thandhiram on 13 November 2020 #suruliswag @karthiksubbaraj @Music_Santhosh @sash041075 pic.twitter.com/rjsTBVg5u8
— Dhanush (@dhanushkraja) November 9, 2020#bujji video song from jagame thandhiram on 13 November 2020 #suruliswag @karthiksubbaraj @Music_Santhosh @sash041075 pic.twitter.com/rjsTBVg5u8
— Dhanush (@dhanushkraja) November 9, 2020
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ஆன 'ரகிட ரகிட' பாடல் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி வெளியானது. இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆனது.
தற்போது இப்படத்திலிருந்து ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக 'புஜ்ஜி' பாடலின் வீடியோ நவம்பர் 13ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.