தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம்வருபவர், ஜெயம் ரவி. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'பூமி' திரைப்படத்தை இயக்குநர் லக்ஷ்மண் இயக்கியுள்ளார். வேளாண்மையை மையாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜெயம் ரவியின் 25ஆவது திரைப்படமாகும்.
இதற்கிடையில் 'பூமி’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படத்தின் நாயகன் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எனது நீண்ட திரைப்பயணம் முழுக்க, முழுக்க ரசிகர்களாகிய உங்களால் ஆனது. நீங்கள் அளித்த அளவற்ற அன்பு, என் மேல் நீங்கள் வைத்த மிகப்பெரும் நம்பிக்கை, நீங்கள் அளித்த உத்வேகம்தான், சிறப்பான படங்களில் நான் பணியாற்றக் காரணம். எனது கடினமான காலங்களில், என்னை உங்களின் சொந்த ரத்தம் போலவே நினைத்து ஆதரவளித்தீர்கள்.
உங்களின் இந்த ஆதரவே, சினிமா மீதான எனது காதலை நிலைபெறச் செய்தது. நீங்கள் இல்லாமல், என்னால் இத்தனை தூரம் வெற்றிகரமாகப் பயணித்திருக்க முடியாது. உங்களை எனது குடும்பத்தினராகவே கருதுகிறேன். 'பூமி' திரைப்படம் எனது சினிமா பயணத்தில் ஒரு மைல் கல்.
இப்படம் எனது திரைப்பயணத்தில் 25ஆவது படம் என்பதைத் தாண்டி, என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். கோவிட்-19 காலத்தில் ரிலீஸாகும் படங்களின் வரிசையில் இப்படமும் இணைந்திருக்கிறது. உங்களுடன் இணைந்து திரையரங்கில் இப்படத்தை ரசிக்க நினைத்தேன், ஆனால் காலம் வேறொரு திட்டம் வைத்திருக்கிறது.
-
#Bhoomi coming to your homes this Pongal 2021 only on @DisneyplusHSVIP 🙏🏼 God Bless! @immancomposer @dirlakshman @AgerwalNidhhi @AntonyLRuben @dudlyraj @Gdurairaj10 @theHMMofficial @sujataa_hmm @shiyamjack @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/gpe4zNiPJm
— Jayam Ravi (@actor_jayamravi) December 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Bhoomi coming to your homes this Pongal 2021 only on @DisneyplusHSVIP 🙏🏼 God Bless! @immancomposer @dirlakshman @AgerwalNidhhi @AntonyLRuben @dudlyraj @Gdurairaj10 @theHMMofficial @sujataa_hmm @shiyamjack @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/gpe4zNiPJm
— Jayam Ravi (@actor_jayamravi) December 24, 2020#Bhoomi coming to your homes this Pongal 2021 only on @DisneyplusHSVIP 🙏🏼 God Bless! @immancomposer @dirlakshman @AgerwalNidhhi @AntonyLRuben @dudlyraj @Gdurairaj10 @theHMMofficial @sujataa_hmm @shiyamjack @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/gpe4zNiPJm
— Jayam Ravi (@actor_jayamravi) December 24, 2020
இப்படம் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. Disney + Hotstar உடன் இணைந்து உங்களின் 2021 பொங்கல் கொண்டாட்டத்தில் பங்குகொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். நிறையப் பண்டிகை காலங்களில் திரையரங்கில் வந்து, எனது திரைப்படத்தைப் பார்த்து, பண்டிகையைக் கொண்டாடியுள்ளீர்கள். இந்தப் பொங்கல் பண்டிகை தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் வீட்டில் உங்களைச் சந்திப்பதை, ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.